Showing posts with label சுய-கவனிப்பு. Show all posts
Showing posts with label சுய-கவனிப்பு. Show all posts

சுய-கவனிப்பு



ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு சுய கவனிப்பு முக்கியமானது, உடல், மன மற்றும் உணர்ச்சி ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு  வகுக்கின்றது. சுய-கவனிப்பை முதலில் வைப்பது சிறந்த மன அழுத்த மேலாண்மை, மேம்பட்ட மனநிலை, அதிகரித்த ஆற்றல் மற்றும் வலுவான உறவுகளுக்கு வழிவகுக்கும். இது சுயநலமாக இருப்பதைப் பற்றியது அல்ல, இது ஆரோக்கியமான மற்றும் நிறைவான வாழ்க்கையை வாழ்வது, மன உளைச்சலை தடுப்பது மற்றும் மீள்தன்மையை உருவாக்குவது பற்றியது.

நம் தினசரி வாழ்வில், உதாரணமாக நீங்கள் கல்லூரி அல்லது வேலைக்கு செல்பார் அனால், நீங்கள் உங்கள் ஆசிரியர்க்கோ, கல்லூரிக்கோ அல்லது நிறுவனத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, உங்களுக்கும், உங்கள் ஆரோக்கியத்திற்கும் கொடுக்கின்றீர்களா என்ற கேள்விக்கு, "கண்டிப்பாக - ஆம்" எனும் பதிலை நான் அழுத்தி கூறவேண்டியது நம் அனைவரது அடிப்படை வாழ்வியல் அவசியம்.

நீங்கள் நினைக்கலாம், கல்லூரியில் ஆசிரியர் கல்வியை தானே கற்பிக்கின்றனர் என்று, முதலில் இந்த வரிகளை நீங்கள் படித்துக்கொண்டிருக்கின்றீர்களானால், அதற்க்கு கல்வியே முதன்மையான அவசியமாக இருக்கின்றது அனால், எதற்காக நீங்கள் கல்லூரிக்கு செல்கின்றீர்கள் என்று உணரவேண்டியது அவசியம். கல்வி மற்றும் உங்கள் தொழிலின் முக்கியத்துவத்தை விட உங்கள் ஆரோக்கியமான வாழ்வு முக்கியமானதென்று நீங்கள் உணரவேண்டியது அவசியம். அதில் சுய கவனிப்பு ஒரு பகுதியாகும்.

சுய கவனிப்பில் நாம் நேரம் ஓதுக்கவில்லை என்றால், கவலை, கோபம், சோர்வு, மனச்சோர்வு முதல் இதய நோய் வரை அதிகரிப்பதை நாம் அனுபவிக்க முடியும், மற்றும் அதனை நீண்ட காலங்களாக அனுபவிப்பவருக்கு நாள்பட்ட மன மற்றும் உடல் ரீதியான சிரமங்களை அணுபவிக்கலாம்.


உங்களது கேள்வி எப்படி சுய கவனிப்பை தொடங்குவது என்றால்!


⇢ உங்கள் நேரத்தையும், ஆற்றலையும் எப்படி ஆரோக்கியமான முறையில் சேமிப்பது

⇢ உங்களுக்கு நீங்களே அன்பு பாராட்டுங்கள்

⇢ ஆரோக்கியமான பொழுதுபோக்குகளில் ஈடுபடுங்கள்

⇢ உடற்பயிற்சி செய்யுங்கள்

⇢ மனநிறைவு மற்றும் தியான பயிற்சி செய்யுங்கள்

⇢ உங்கள் உடலுக்கும் மனதுக்கும் என்ன தேவை என்பதைப் பற்றி சிந்தியுங்கள்

⇢ உங்களுக்கு மகிழ்ச்சியையும், நிம்மதியையும் தருவது எது என்பதைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள்.



 முதலில் உங்களுக்கு மகிழ்ச்சியையும், நிதானத்தையும் தரும் பழக்கத்தில் இருந்து தொடங்குங்கள்.

→ பின்பு அதனை உங்களின் தினசரி நடைமுறைகளில், எந்த நேரத்தில் தொடர விரும்புகிறீர்கள் என்பதில் தொடங்கி, எந்த தடங்கலும் இல்லாமல் எப்படி தொடர்வது என்று திட்டமிடுங்கள்.

→ பின்பு, அதனுள் உங்கள் ஆரோக்கியத்திற்கும், முன்னேற்றத்திற்கும் என்ன மேம்படுத்த வேண்டும், இணைக்க வேண்டும் என்பதை வடிவமைப்பு செய்யுங்கள்.

→ அனைத்தையும் ஒரே நேரத்தில் செய்து அழுத்தத்தை உணராமல், பொறுமையாகவும், தொடர்ந்தும் செய்யக்கூடிய வகையில் நகருங்கள்.

→ இதனால் உங்கள், குடும்பமோ, அல்லது, உங்களை சார்ந்த யாராகவோ அல்லது எதுவும் பாதிக்கும் என்று நீங்கள் உணர்ந்தால், உங்களையும், உங்கள் தனிப்பட்ட ஆரோக்கியம் மற்றும், முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு செயல்படுங்கள்.