Showing posts with label 8 March : சர்வதேச மகளிர் தினம். Show all posts
Showing posts with label 8 March : சர்வதேச மகளிர் தினம். Show all posts

8 March : சர்வதேச மகளிர் தினம்

 















பொறாமை கொள்கின்றேன், பெண்மை எனும் இயற்கையின் படைப்பில் மானுட உருவமுற்ற இயற்கையின் மீது.


இயற்கையின் வித்தே, இனங்கள் படைக்கும் சிறப்பியே,


கருவுற்று, பிறப்புற்று, பருவமுற்று, தாய்மையுற்று, முதுமையுற்று, உயிர்பிரிந்தும் பிரருக்கென தன்னை அர்ப்பணிக்கும் பெண்மை.


 தனது உயிரை பகிர்ந்து, உயிர்களை படைப்பதும் பெண்மை.


வரம் எனும் கரு சுமந்து தாய்மை அடையும் பெண்மை.


பிறர் விருப்பதினை தன் விருப்பமென கொண்டு மகிழ்விக்கும் பெண்மை.


கருவுற்ற நொடி முதல் கல்லறை சென்றும் காதல் கொள்ளும் பெண்மை.


எந்த தருணத்திலும் பிறர் மனம் புண்படாது  ஆதரிக்கும் பெண்மை.


தன்னை வெறுப்பாராயினும்,  பாரபட்சம் இன்றி அன்பு பாராட்டும் பெண்மை.


இயற்கைக்கு இணையாக வாழ்நாள் முழுவதும் கடல் அலை என  உழைக்கும் பெண்மை.


மானுட உருவம் கொண்ட  கடவுளும் பெண்மை.


மகளிர் தின வாழ்த்துக்கள்...