✨ SPIRITUAL AWAKENING / ஆன்மீக விழிப்புணர்வு

 












































































WHAT WE ARE IN THIS UNIVERSE?






Humanity can be broadly classified into three groups: people of light, people of balance, and people of darkness. Each group fulfills a vital function in our lives, molding our perspectives and fostering growth. Their existence promotes balance within ourselves, rather than division. Notably, an individual may be perceived as a person of light by one person and a person of darkness by another. Our roles are fluid, changing according to our relationships and the way others perceive us.

However, the objective is not to pass judgment but to discover the equilibrium within each of us. When we perceive others as embodiments of light and darkness, we initiate the healing process, not just for ourselves, but also for those around us. As we all work towards balance, the duality we once clung to dissolves into unity. The code for this has always existed, awaiting our recognition.

We each represent an expression of limitless polarity in form, with a purpose that begins with healing, involving the rectification of generational patterns, seeking the divine within ourselves, and acknowledging our worthiness, which ultimately leads to the revelation of our greater purpose.

This journey requires us to make a choice, effectively integrating with the divine code laid out for us. Along the way, we have been equipped with various tools, initially through religion, then science, and currently technology, each facilitating the same task: to evolve, expand, and find the divine within ourselves. Regardless of the tools we select, we all share common life objectives to heal, seek, balance and ultimately unite.


I'm grateful to the universe has brought us to this shared moment, and I'm thankful for the opportunity to inspire and uplift each other.



இந்த பிரபஞ்சத்தில்  என்ன நாம் ? 




இந்த பதிவின் கண்ணோட்டத்தில் மக்கள் பொதுவாக மூன்று வகைப்படுகிறார்கள்:

 ஒளி மக்கள், சமநிலை மக்கள் & இருள் மக்கள். ஒவ்வொருவரும் நம் வாழ்க்கையில் ஒரு முக்கிய நோக்கத்தை கொண்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நாம் வளரும் விதத்தை மற்றும் பின்பற்றும் விதத்தை பொறுத்து வடிவமைக்கிறார்கள். அவை நம்மைத் திசைதிருப்பவோ அல்லது, மாறாக நமக்குள் சமநிலையை உருவாக்க உதவுகின்றன. நீங்கள் ஒருவருக்கு ஒளியை பகிரும் நபராகவும், இன்னொருவருக்கு நிழலலை பகிரும் நபராகவும் இருக்கலாம் என்பதுதான் இதன் சுவாரஸ்யம். 

நாம் யாரைக் காண்கிறோம், யார் நம்மைக் காண்கிறார்கள் என்பதைப் பொறுத்து நமது பாத்திரங்கள் மாறுகின்றன. இருப்பினும், இலக்கு என்பது தீர்மானிப்பது அல்ல, நம் ஒவ்வொருவருக்குள்ளும் சமநிலையைக் கண்டறிவது.

மற்றவர்களை ஒளி மற்றும் நிழல்களின் அவதாரங்களாகப் பார்க்கும்போது, ​​நாம் குணமடையவும், முன்னேறவும் தொடங்குகிறோம். நாம் மட்டுமல்ல, நம்மைச் சுற்றியுள்ளவர்களும் நாம் மற்றும் அனைவரும் இந்த சமநிலையில் நடக்கும்போது, ​​நாம் ஒரு காலத்தில் ஒட்டிக்கொண்டிருந்த இருமை ஒற்றுமைகள் கரைந்துவிடும்.

இதற்கான குறியீடு எப்போதும் நாம் இதனை அங்கீகரிக்க உள்ளோம் என்பதை தொடர்ந்து காத்திருக்கிறது.

நாம் ஒவ்வொருவரும் ஒரு நோக்கத்தை நிறைவேற்ற இங்கே வடிவத்தில் வரம்பற்ற அவதாரத்தின் வெளிப்பாடாக உள்ளோம். அந்த நோக்கம் நம்மை நாம் குணப்படுத்துதல், நமது தலைமுறைகலின் வடிவங்களை குணப்படுத்துதல், நம் உள்ளிருக்கும் இறையை தேடுதல் மற்றும் நமது தனிப்பட்ட நோக்கத்தை வெளிப்படுத்தும் நமது தகுதியைக் கண்டறிதல் ஆகியவற்றுடன் தொடங்குகிறது. 

இந்த பயணம் வழிகளை தேர்ந்தெடுப்பது பற்றியது. இது நமக்காக வகுக்கப்பட்ட தெய்வீகக் குறியீட்டோடு நாம் இணைவது பற்றியது. அவ்வழியில், நமக்கான கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. முதலில், அது மதம், பின்னர் அறிவியல், தற்போது நவீன தொழில்நுட்பம் நிறைந்த வாழ்க்கை. ஒவ்வொரு கருவியும் ஒரே பணியை பிரதிபலிக்கின்றது. நாம் பறினாமிக்கவும், விறிவடையவும், மற்றும் நமக்குள் நாம் எனும் இறையை கண்டுபிடிப்பது ஆகும்.

நாம் எந்த கருவிகளைத் தேர்ந்தெடுக்கின்றோம் என்பது முக்கியம் அல்ல. நாம் அனைவரும் வாழ்வில் குணப்படுத்தவும், தேடவும், சமநிலைப்படுத்தவும் மற்றும் இறுதியில் ஒற்றுமையுடன் ஒன்றாக நடக்க வாழ்வில் நாம் அனைவரும் ஒரே பணிகளைப் பகிர்ந்து கொள்கின்றோம் என்பதுவே முக்கியமான ஒன்றாகும்.

இவ்வரிகளை நீங்கள் இன்னோடி படிக்க என்னை தேர்ந்தெடுத்ததற்கு பிரபஞ்சத்திற்கு நன்றி.



PATH TO SPIRITUAL AWAKENING / ஆன்மீக விழிப்புணர்வுக்கான பாதை




Spiritual awareness is not something that helps everyone's progress from the experience of an individual from the same process or cultivation system. It is available in many dimensions from different ways, such as the biological methods and experiences of an individual, and it is not conventionally proven by anyone.


ஆன்மீக விழிப்புணர்வு என்பது ஒரு தனிநபரின் அனுபவத்தில் இருந்து அதன்வழியே ஒரே செயல்முறை அல்லது பயிர்ச்சி முறைகளில் இருந்து அனைவரின் முன்னேற்றத்திற்கு உதவும் ஒன்றல்ல. அது ஒரு  தனிநபரின் வாழ்வியல் வழிமுறை மற்றும் அனுபவங்களை போன்று வேறுபட்ட வழிகளில் இருந்து பல பரிமாணங்களில் கிடைக்கின்றது மற்றும் இது எவராலும்  அதிகாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட முடியாத ஒன்றாகும். 



Tool / கருவி




Through the tool called your body radiates the energy from you are inside the body of you.

உடல் எனும் கருவியில் இருந்து உன்னை வெளிவிக்கும் சக்தியானது உன் எனும் உடம்பின் உள்ளே இருக்கின்றன.















HE'S THE ONLY ONE / அவன் ஒருவனே






He is the giver of his grace to the one who seeks for self satisfaction and benefit such as desire, ambition, study, desire.

My lord shiva is the one who provide himself up to those who renounce all these, whatever they are and forget themselves and admit that everything belongs to him.











ஆசை, லட்சியம், படிப்பு,விருப்பம் போன்ற சுய நலன் மற்றும் இன்பம் வேண்டுபவருக்கு தனது அருளை வழங்குபவன் அவன்.

இவை, அவை மற்றும் எவையாக இருப்பினும் அனைத்தும் துறந்து தன்னிலை மறந்து அனைத்தும் அவனே என்று உணர்ந்து நடப்பவர்களுக்கு தன்னையே வழங்குபவன் என் அப்பன் சிவன்.



WORSHIPING HIM / அவனை வணங்குதல்



It takes nothing and gives everything ( benefits of prayer ) by worshiping lord shiva.

But, it takes everything ( births ) to surrender his compassionate feet.


சிவனை வழிபடுவதன் மூலம் எதையும் கொள்ளாது, எல்லாவற்றையும் ( ஜெபத்தின் பலன்கள் ) தருகிறது.

ஆனால், அவரது இரக்கமுள்ள பாதங்களை சரணடைய எல்லாவற்றையும் ( பிறப்புகள் ) எடுக்கின்றது.



MIND / சிந்தனை


Sometimes the worst place to be is in your own mind.

சில நேரங்களில் நீங்கள் இருக்கக்கூடிய மோசமான இடம் உங்களது சிந்தனையே ஆகும். 





THE ENDLESS STATE CALLED SALVATION / முடிவில்லாத நிலை எனும் முக்தி



வாழ்வின் முடிவெனும் இறப்பின் பிறப்பை வாழ்வின் பிறப்பென எண்ணி வாழ்பவன் முடிவில்லாத பிறப்பெனும் போற்றுதலுக்குரிய பிறப்பாகின்றான்.


He who lives considering the birth of death as the end of life as the birth of life, becomes a birth worthy of admiration as birth of eternal nature. 




HE SANCTIFIES / புனிதமடைய செய்கின்றான்


யார் ஒருவர் உள் உருகி துஆ செய்கின்றாரோ, அவரது வாழ்வின் கடினமான தருணங்களில் அவரது துயரங்கள் அனைத்தும் கண்ணீர் நிரம்பிய மேகங்களென நிறைந்து மாரி என மாறி "அல்-ஹாதி" அவன் நிலத்தை தொடும் முன் "அர்-ரஹ்மான்" தன் கருணை கரம் நீட்டி தவறுகளை மன்னித்து, அப்பிரப்பினை புனிதமடைய செயகின்றான்.


One who offers heartfelt prayers, particularly during the most difficult moments of his life, finds that all his sorrows are transformed into clouds filled with tears, becoming rain "Al-Hadi" before touching the ground, at which point "Ar-Rahman" extends His merciful hand, forgives his mistakes, and sanctifies that soul. 



SALVATION / முக்தி



A birth like a wick fell in the darkness of life who craves salvation, realize that the radiance will only emanate from you.

வாழ்வு எனும் இருளில் விழுந்த திரியென முக்தியை தேடும் மானிடா, பிரகாசம் உன்னில் இருந்து மட்டுமே வெளிப்படும் என்பதை உணர்ந்துகொள்.



இறைவன் / GOD



இறைவன் ஒருவனே, அவன் மதங்களுக்குள்ளும், ஜாதிகளுக்குள்ளும், கற்சிலைகளுக்குள்ளும், சிலுவைகளுக்குள்ளும், மதியில்லா மானிட பிறப்புகள் விருப்பங்களுக்கேற்ப உருவங்களையும், வேறுபட்ட பெயர்களையும், ஆற்றல்களையும் கொண்டவன் அல்லன். 





The Lord remains a singular, undivided entity, uninfluenced by distinctions of religion, caste, stone, or cross, and unbound by diverse forms, names, and powers that cater to the ephemeral fancies of non-corporeal human manifestations.



INTENT / நோக்கம் 



Those who sing that only god is enough will never achieve in it. Devotional, spiritual or by any means to that spot that puts into that life only who step ahead without any intents even this too.


கடவுள் மட்டும் போதும் என்று உரைப்பவர்கள் ஒருபோதும் அதில் வெற்றி காணப்போவதில்லை.

பக்தி ஆன்மீகம் எந்த மார்கமாக  இருப்பினும் எதிர்பார்ப்புகள் அற்ற வாழ்வே கொண்டு சேர்க்கும் அந்த இடத்திற்கு.





நான் எனும் அவன்



அனைத்தும் எனும்  அவனுடையதினுள் ஓர் அவனென பிறப்புண்டு நான் எனும் அவனினுள் அவன் அருளாலே நான் அவன் உணர்ந்து அவன் நான் புரிந்து அனைத்தும் அவனே என்று உணர்ந்திட நான் நான் ஆகின்றான்.




SPIRITUAL EXPERIENCE / ஆன்மீக அனுபவம்


 


A mind that is stretched by a spiritual experience can never go back to its old dimensions.


ஆன்மீக அனுபவத்தால் விரிந்து கிடக்கும் மனம் அதன் பழைய பரிமாணங்களுக்கு திரும்ப முடியாது.



RADIANCE / பிரகாசம்   



Ordinary species thinks that god is light, a genuine devote of shiva knows that god is a radiance. The light will go out one day, But the radiance is seen to increase or decrease in terms of our emotions and actions.

சாதாரண இனங்கள் கடவுள் ஒளி என்று நினைக்கின்றனர், ஆனால் சிவனின் உண்மையான பக்தர் கடவுள் ஒரு பிரகாசம் என்று அறிவர். ஒளி ஒரு நாள் வெளியேறும், ஆனால் பிரகாசம் நம் உணர்ச்சிகள் மற்றும் செயல்களின் அடிப்படையில் அதிகரிக்கிறது அல்லது குறைகின்றது.





THE LORD RADIATES DEVINE LIGHT / கர்த்தர் ஒளி வீசுகிறார்


Even in times of utmost darkness, when God's children are beset by uncertainty, the Lord illuminates the path for those who pray to Him with genuine devotion.


ஞாலத்தினையும் இருள் ஆட்கொள்ளும் பொழுதிலும், தேவனின் குழந்தைகள் அனைவரும் இருளில் இருக்கும் நொடிகளிலும் மெய்யாகவே மெய்யாகவே யார் ஒருவர் தேவனை பிரார்த்திக்கின்றாரோ அவர் மீது கர்த்தர் ஒளி வீசுகிறார்.




MEDITATION / தியானம்



Meditation can take you back to the place you have forgotten or lost.

தியானம் உங்களை நீங்கள் மறந்த அல்லது தொலைத்த பதிகளுக்கு மீண்டும் கொண்டு சேர்க்கும்.




SPIRITUAL AWARENESS / ஆன்மீக விழிப்புணர்வு



Spiritual awareness means forgetting the self to know the inner self of the tool called me, the self, and living without the greed of the self.


ஆன்மீக விழிப்புணர்வு என்பதாவது நான் எனும் கருவியின் உள் இருக்கும் நான் அறிய நான் மறந்து, நான் எனும் பேராசை துறந்து வாழ்வதாகும்.

நான் அறிய நான் உள் கொண்டுள்ள நான் நான் அறிந்திட...

 

 








THE SOURCE CALLED HUMANITY / மனிதநேயம் எனப்படும் ஆதாரம்



The divisions between your God and our God are rumored by human births, Although there are many ways to convey all of the divisions of spirituality and devotion the source is humanity.

உமது கடவுள், எமது கடவுள் என்ற பிரிவினைகள் மானிட பிறப்புகளால் வதந்தப்பட்டவை ஆகும் ஆன்மீகம் மற்றும் பக்தி பிரிவினைகளின் வெளிப்பாடுகள் அனைத்திற்கும் வழிகள் பல இருப்பினும் மூலம் மனிதனேயமே ஆகும்.

மந்தைகளாய் வதந்தைகளுக்கு விருந்தாகா வலி கொண்டு வழி அறிந்து வாழ்வது வரமாகும். 


 

 ACTUALITY / எதார்த்தம்



Not everyone can understand your journey. Therefore, it is best to be yourself.

உங்கள் பயணத்தை எல்லோராலும் புரிந்துகொள்ள முடியாது. ஆகவே, நீங்கள் நீங்களாகவே இருப்பது சிறந்தது.


 

THE EXPERIENCE THAT CANNOT BE HATRED / வெறுக்க முடியாத அனுபவம்

You can't hate the experience that you love yourself and design yourself.

உங்களை நீங்கள் நேசிக்க, உங்களை வடிவமைத்த அனுபவத்தை நீங்கள் வெறுக்க முடியாது. 




GOAL OF BIRTH / பிறப்பின் இலக்கு 

The goal of birth is the reason you were born. You know yourself by knowing that.

பிறப்பின் இலக்கு என்பதாவதே நீ பிறந்ததன் காரணம் ஆகும். அதை அறிந்திட நீ உன்னை அறிவாய். 



TEST / சோதனை 

It doesn't matter which religion you follow.

However, the true test lies in whether you have cultivated a consciousness of God or the consciousness of your favorite god.

Otherwise, it would mean that your time had been wasted.


நீங்கள் எந்த மதத்தையும் பின்பற்றுங்கள், அது ஒரு பொருட்டல்ல.

ஆனால் நீங்கள் கடவுள் உணர்வு அல்லது உங்களது விருப்பமான கடவுளின் நனவை எவ்வளவு உருவாக்கியுள்ளீர்கள், அதன் மூலம் நீங்கள் யார் என்பதையும், இறை எனும் சொல்லின் அர்த்தத்தையும் என்பதுதான் சோதனை. 

அப்படி இல்லாவிட்டால் நீங்கள் உங்கள் நேரத்தை வீனடித்தீர்கள் என்றே அர்த்தமாகும். 



BOOK / புத்தகம் 

Your experience is a book for others.

உங்களது அனுபவம் பிறருக்கு புத்தகம் ஆகும்.



SELF-AWARENESS / தன்னிலை அறிதல்

If there is no enemy within you, no enemy outside can do any harm to you.

உன்னுள் எதிரி இல்லை என்றால், வெளியில் இருக்கும் எந்த எதிரியும் உனக்கு எந்த தீங்கும் செய்ய முடியாது.



YOU HAVE TO FIND YOURSELF / உங்களை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும் 

You're not you the same as everyone calls

You're hidden inside the tool yours called you

To find that answers, you must find yourself hidden within yourself.


எல்லோரும் அழைக்கும் அதே நீங்கள் நீங்கள் இல்லை.

நீங்கள் என்று அழைக்கப்படும் உங்களின் கருவியின் உள்ளே நீங்கள் மறைந்துள்ளீர்கள்.

அதன் பதில்களைக் கண்டுபிடிக்க  உங்களின் உள்ளே ஒளிந்திரிக்கும் உங்களை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.



LIFESTYLE / வாழ்வியல் முறை

Love is not merely a relationship with an individual. Love is a lifestyle that we apply to everything.

காதல் / அன்பு என்பது ஒரு நபருடனான உறவு அல்ல. காதல் / அன்பு என்பது அனைத்துடனும் நம் வாழும் வாழ்வியல் முறை ஆகும்.



NATURE'S RESPONSIBILITY / இயற்கையின் பொறுப்பு 


It is not any living being's responsibility to heal, save, punish or control another living being.

எந்த ஒரு உயிரினத்தையும் குணப்படுத்துவது, காப்பாற்றுவது, தண்டிப்பது அல்லது கட்டுப்படுத்துவது எந்த ஒரு உயிரினத்தின் பொறுப்பு ஆகாது.




ONLY FOR THE CORPSE / சவத்திற்கு மட்டுமே 

You who constantly doing sin by think of death as the end of the body, the moment of separation from the body, as a sin, There is an end only for your body, which you have mistakenly thought to be yours.

உடல் விட்டு உயிர் பிரியும் தருணத்தை முடிவெனும் மரணம் என்று என்னி  நித்தம் பாவம் புரியும் மானிடா, முடிவென்பது உண்டு நீ எனும் உன் சிந்தையில் தவறாக கொண்டிருக்கும் சவத்திற்கு மட்டுமே.

உன்னை அழித்து கொண்டிருக்கும் உனக்குள் நீ அழிவில்லா பிறப்பென.



AGE / வயது 

Human births can be 90 years old at 18 and 18 years old at 90. Time and age are concepts created by humans,

And they vary in form for each birth based on its experiences.


18 வயதில் 90 வயதானவர்களாகவும், 90 வயதில் இலைஞர்களாகவும் வாழும் மானிட பிறப்புகளும் உள்ளன. காலம் மற்றும் வயது என்பது மானிடர்களால் உருவாக்கப்பட்ட ஒரு கருத்துப்படிவம் ஆகும்.

கருத்துபடிவங்கள் படிவங்கள் என வேறுபடுகின்றன ஒவ்வொரு பிறப்பிற்கும் அதன் அனுபவங்களின் அடிப்படையில்.



I HAVE ATTAINED EVERYTHING / அடைந்திட்டேன் அனைத்தும்


I am who desireless, with unknowable, perceptible reasons I bowed down  by renounced everything. to his feet who is everything. because of the desire,

I have attained by bow down to the feet of the One who has nothing, to attain everything.

"OM NAMAH SHIVAYA"


ஆசையற்றவனான நான் அறியமுடியாத, உணரமுடிந்த காரணங்களுடன் ஆசையுற்றதன் காரணங்களால் பணிந்தேன் அனைத்தும் துறந்து அனைத்தும் ஆனவனாகிய அவன் அடி.

அடைந்திட்டேன் ஏதும் அற்றவனாகியவனின் அடி பணிந்திட அனைத்தும் அடைந்தவனாய். 

"ஓம் நமசிவாய"




FAILURE IS THE FUEL / தோல்வியே உணவு


A person who fully realizes that every moment, every birth is being tested by God, even after facing failure a million times, keeps moving forward with a positive mindset.

Even if a person who eats failure as food conquers the universe, it will be a mere coincidence...

ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு பிறப்பும் கடவுளால் பரிட்சிக்கப்படுகின்றன என்பதனை முழுமையாக உணர்ந்த ஒருவன், கோடி முறைகள் தோழ்வியை தழுவிய பின்பும், நேர்மறை எண்ணத்துடன் தனது  அடிகளை முன்னோக்கி மட்டுமே வைக்கின்றான்.

தோல்வியை உணவென உட்கொண்ட ஒருவன்/ள் அண்டத்தினையும் தன்வசப்படுத்தினாலும் தற்செயலான ஒன்றாகுமே...



KARMA / கர்மம்


Fish eats worms

Man eats fish

the worm will wait for the man to die

Forgiveness is given for mistakes made out of ignorance, Karma continues for mistakes made consciously, even after forgiveness.


புழுவினை மீன் உண்ண

மீனை மனிதன் உண்ண

காதிருக்குமாம் புழு சவத்திற்காக

மன்னிக்கப்படுகிறது அறியாமையால் உண்டாகும் தவறுகளுக்கு, கர்ம வினை தொடர்கிறது உணர்ந்து உண்டாக்கும் தவறுகளுக்கு மன்னிப்பு பெற்ற பிறகும்.




WE'RE NATURE / நாம் இயற்கை


Human births are a microcosm of the larger version of the universe that contains the universe within universe.

We are nature, which contains the nature within nature.


மானுட பிறப்புகள் பிரபஞ்சத்தினை தன்னுள் கொண்டுள்ள பிரபஞ்சத்தின் பெரும் பதிப்பின் நுண் பதிப்பு  ஆகும்.

பிரபஞ்சத்தினுள் பிரபஞ்சத்தினை தன்னுள் கொண்டுள்ள இயற்கை நாம்.



 

உயற்பண்பு


நான் அனைத்தும் கொண்டவன் என்பவன் எதுமற்றவன் அவன்

எதுமற்று தன்னை துறந்து நான் அறிய நான் என்று கூற வெறுப்புற்றவன்  அவன்

நான் நான் கொண்டவன் எதுமற்றவன் அவன்.


 

புரிதல்


அறிவு என்பது தினசரி வாழ்வில் நாம் கர்ப்பதாகும்,

ஞானம் என்பது நாம் கொண்டதனை துறந்து பயணிப்பதாகும்,

அறிவற்ற துறவரம் அற்ற அறிவு எதிர்மறை ஆற்றலின் ஆக்கம் ஆகும்.




MOST BEST EXPERIENCE / ஆகச்சிறந்த அனுபவம்


The burden of trying to let go of years of pain and suffering and live with no emotions is harder than trying to live with no emotions.

The best experience is to live life renouncing everything.



ஆண்டுகளாய் கொண்ட வலி, துன்பம் போன்ற அனுபவங்களை விட அதனை துறந்து ஏதுமற்ற உணர்ச்சிகளுடன் வாழ முயற்சிக்கும் பாரமே கடினமானது.

அனைத்தும் துறந்து வாழ்வதாவது ஆகச்சிறந்த அனுபவம் ஆகும்.



மூடத்தனம் 


மானிட பிறப்புண்ட நாம் பிறப்புண்டதன் காரணம் அறியா பிற பிறப்புகளால் உருவாக்கப்பட்ட இயல்பு மற்றும் பொது எனும் பாதை வழி நகர்ந்து இப்பிறப்பு எனும் வரத்தினை வீணடித்து மற்றொரு வரமெனும் மரணத்தினையும் சாபமென பெருகின்றோம்.

இயற்கையால் பிறப்பு எனும் பரிசு பெற்ற நாம் அதன் காரணம் அறிய முயற்சிக்கா, அதனை நம் விருப்பத்தின் வழி பயன்படுத்த விரும்புவது மூடத்தனமாகும்.



ஆதி கும்பேஸ்வரன்


பணம் கோடி வாரி வழிபட நிறைவடையாது நீலகண்டன் மனம்

மனம் நாடி தேடி வழிபட குறையாது கொடுப்பது ஆதிகேசவனின் குணம்.

பாவம் எனும் பாதாளத்தில் விழும் பிறப்புகளை  காத்தருள்வதோ கருநாகரனை கழுத்தில் கொண்ட அவன்.

காமம், கோபம் போன்ற உணர்வுகலற்று தவமுற்றவருக்கு வரம் கொடுக்கும் வைத்தீஸ்வரன் அவன்.

அலங்காரம் எனும் உடுப்பை விரும்பாதவனோ அவன்.

அன்பெனும் ஆயுதம் ஏந்தி அனைத்தையும் அருள்பவனே அவன்.

தாட்சாயணியை தனதுருவில் சமமாய் கொண்டு சமத்துவத்தின் வித்தாய் விளங்குபவன் அவன்.

மனிதநேயம் எனும் மலையின் உச்சியில் வீற்றிருப்பவன் மகாதேவன் அவன்.

போதாது பெற்றிட அவனை அண்ட மொழிகளும் முக்கண்ணன் அவன்.

இருப்பினும் புகழ் பாடாமல், உயிர் பிரிவேன் நொடி மறவேன் என் அப்பன் ஆதி கும்பேஸ்வரன் அவன். 


நமசிவாய...



PRAYER / தொழுகை


Do not allow yourself to underestimate or despise prayer at any moment or situation.

Because even that moment can become a turning point.

Even a second can change our lives...


எந்த நொடியிலும், நிலையிலும் தொழுகையை குறைத்து மதிப்பிடுதலோ, வெறுக்கவோ உங்களை அனுமதிக்காதீர்கள்.

ஏனெனில் அந்த நொடியும் திருப்புமுனையாக அமையக்கூடும்.

நொடியும் நம் வாழ்வை மாற்றி அமைக்கக்கூடும்...


நான் எனும் அவன்

உன்னுள் இருக்கும் நான் எனும் உன்னை அறிய நான் மறந்து, பொறாமை உன்னுள் வளர காரணமான நான் எனும் பேராசை திறந்திட, நான் நான் அடைகிறேன்.



வாழ்வில் நீங்கள் விரும்பும் அனைத்தையும் பெறவும் உங்கள் இலக்குகளை அடையவும் என்ன மனநிலை மாற்றங்கள் மற்றும் உத்திகள் உதவும்?


நீங்கள் வெறும் ஒரு பௌதிக உலகில் வாழும் ஒரு பௌதிக ஜீவன் அல்ல. நீங்கள் ஆற்றலால் ஆனவர், அதிர்வுகள் நிறைந்த ஒரு பிரபஞ்சத்தில் இருக்கின்றீர்கள். ஆற்றலை பகிரவும், பெறவும் உங்களுக்கு ஆற்றல் உள்ளது. 


அனைத்தும் ஆற்றலால் நிறைந்த உலகில் ஒரு ஆற்றலாக எப்படி வாழ்வது என்பதைப் புரிந்துகொள்வது உங்களுக்கு மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக இருக்கும். நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும், நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு செயலும், சுவாசம், நடைபயிற்சி மற்றும் உணவு போன்ற எளிய பணி மற்றும் செயல்களிலிருந்து உங்கள் உணர்ச்சி மற்றும் எண்ணங்களின் சிக்கலான தன்மை வரை, ஆற்றல் அடிப்படை தேவையாக இருக்கின்றது.


இந்த எண்ணம் மற்றும் உணர்ச்சிகள் நேர்மறை மற்றும் எதிர்மறை என்று இரு வகைப்படுகின்றது, அவை உங்கள் அனுபவத்தை வடிவமைக்கக்கூடிய அவற்றின் சொந்த ஆற்றல்மிக்க அதிர்வுகளைக் கொண்டுள்ளன. அவை உங்கள் அனுபவத்தை வடிவமைத்து உங்களைச் சுற்றியுள்ள உலகில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. மேலும் உங்கள் சொந்த அதிர்வுகளை கட்டுப்படுத்துவதன் மூலம், நீங்கள் முடிவில்லா ஆற்றல்களின் உலகத்தைத் திறக்கலாம். உங்களை ஒரு ஆற்றல் கடத்தியாக நினைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நொடியும் நீங்கள் உங்களைப் பற்றி பிரபஞ்சத்திற்கு சமிக்ஞைகளை அனுப்புகின்றீர்கள். இந்த சமிக்ஞைகள் மற்ற ஆற்றல்மிக்க உயிரினங்கள், நிகழ்வுகள் மற்றும் அனுபவங்களை ஈர்க்கும் அல்லது விரட்டும். உங்கள் ஆற்றல்  கோபத்தையும் விரக்தியையும் வெளிப்படுத்தினால், உங்கள் உடலும் யதார்த்தமாக அதையே பிரதிபலிக்கும்.


இயற்கையாகவே நீங்கள் எப்படி உணர்கிறீர்கள், நீங்கள் யார், உங்கள் ஆற்றல் என்ன என்பதோடு ஒத்துப்போகும் விஷயங்களை நோக்கி ஈர்க்கப்படுவீர்கள். நீங்கள் செல்வம் மற்றும் மிகுதியின் ஆற்றலை வெளிப்படுத்தினால், உங்கள் வாழ்க்கை உங்கள் உடல் யதார்த்தத்தில் அதிக செல்வத்தையும் மிகுதியையும் கொண்டு வருவதன் மூலம் அதைப் பிரதிபலிக்கும். அதேபோல் நீங்கள் எதிர்மறை அல்லது முரண்பாடான ஆற்றலை வெளிப்படுத்தினால், உங்கள் இருப்பு நிலைக்கு பொருந்தாத அனுபவங்களை நீங்கள் விரட்ட வாய்ப்புள்ளது. உங்கள் அதிர்வு சுயம் ஒத்த விஷயங்களை ஈர்க்கிறது என்பதை நீங்கள் புரிந்துகொண்டவுடன், உங்கள் வாழ்க்கையில் ஒரு வித்தியாசமான அனுபவத்தை நீங்கள் விரும்பினால், நீங்கள் வெளியிடும் சமிக்ஞைகளை மாற்ற வேண்டும் என்பது தெளிவாகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நீங்கள் வெவ்வேறு சூழ்நிலைகளையோ அல்லது விளைவுகளையோ ஈர்க்க விரும்பினால், உங்கள் எண்ணங்கள், உணர்ச்சிகள் மற்றும் ஒட்டுமொத்த ஆற்றலை நீங்கள் அனுபவிக்க விரும்புவதோடு சீரமைக்க வேண்டும். நீங்கள் அனுப்பும் சமிக்ஞைகளை உணர்வுபூர்வமாக மாற்றுவதன் மூலம், உங்கள் வாழ்வில் வரும் வடிவங்கள் மற்றும் அனுபவங்களில் மாற்றத்தை நீங்கள் உருவாக்கலாம்.


நீங்கள் உங்களை பற்றி கற்பனை செய்வதை விட மிகவும் சக்திவாய்ந்த ஆற்றல் உடையவர். நீங்கள் விரும்பிய வாழ்க்கையின் அதிர்வுகளை எவ்வாறு கடத்துவது என்பதைப் புரிந்துகொள்வதன் மூலம், நீங்கள் உலகை அனுபவிக்கும் விதத்தை அடிப்படையில் மாற்றலாம் மற்றும் உங்கள் இலட்சிய வாழ்க்கையுடன் இணைந்திருக்கலாம். உண்மையில், உங்கள் எண்ணங்கள் சீரற்ற மன செயல்முறைகள் மட்டுமல்ல. அவை ஆற்றலையும் அதிர்வுகளையும் சுமந்து செல்கின்றன. நீங்கள் உருவாக்கும் ஒவ்வொரு எண்ணமும் உங்கள் மூளையின் நியூரான்களில் அதிர்வுகளின் ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்ணை அமைக்கிறது. இந்த ஆற்றல்மிக்க செயல்பாடு ஒரு சக்திவாய்ந்த ஆற்றலை உருவாக்குகிறது, அது தொடர்புடைய அனுபவங்களை உங்களை நோக்கி இணைத்து ஈர்க்கிறது. சாராம்சத்தில், உங்கள் சிந்தனையால் வெளிப்படும் ஆற்றலும் அதிர்வுகளும் காந்தங்களாகச் செயல்படுகின்றன, நீங்கள் கவனம் செலுத்துவதன் சாரத்தை ஈர்க்கின்றன மற்றும் வெளிப்படுத்துகின்றன. இந்தக் கொள்கைகளைப் புரிந்துகொள்வதன் மூலம், நீங்கள் விரும்பும் விளைவுகளை நோக்கி உங்கள் எண்ணங்களை உணர்வுபூர்வமாக இயக்க முடியும்.


உங்கள் எண்ணங்களின் ஆற்றலை பயன்படுத்தி உங்கள் யதார்த்தத்தை வடிவமைக்கும்போது, உங்கள் எண்ணங்கள் கட்டுமானத் தோகுதிகலாக யதார்த்தத்தை வடிவமைக்கிறது. "ஒரு பழமொழி உண்டு : உங்கள் எண்ணங்களைப் பாருங்கள், அவை வார்த்தைகளாகின்றன. உங்கள் வார்த்தைகளைப் பாருங்கள், அவை செயல்களாகின்றன". உங்கள் செயல்களைப் பாருங்கள், அவை பழக்கவழக்கங்களாகின்றன. உங்கள் செயல்களைப் பாருங்கள், அவை குணாதிசயங்களாகின்றன. உங்கள் குணத்தைப் பாருங்கள், அது உங்கள் விதியாகிறது. உங்கள் எண்ணங்கள் உங்கள் எதிர்காலத்தை வெளிப்படுத்தும் வித்துக்கள்.


உங்கள் ஆற்றலை எவ்வாறு நிர்ணயிக்கின்றீர்கள் என்பதில் கவனமாக இருப்பது முக்கியம், ஏனெனில் அது உங்கள் கவனத்தைப் பின்தொடர்ந்து இறுதியில், உங்கள் ஆற்றலை எங்கு செலுத்துவது என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க அமைகின்றது. அதனை தேர்வு செய்யும் சுதந்திரம் உங்களுக்கு உள்ளது மற்றும் அதனை முடிவெடுக்கும் செயலுக்கு கூட ஆற்றல் தேவைப்படுகிறது. "ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஒருமுறை கூறினார், எல்லாமே ஆற்றல்தான்". உண்மையில், இந்தப் பதிவைப் படிப்பதற்கும் ஆற்றல் தேவைப்படுகிறது. நாம் கவனம் செலுத்தும் ஆற்றல் இறுதியில் நமது யதார்த்தத்தை வடிவமைக்கிறது. இந்த ஆற்றலை வழிநடத்தவும் நிர்ணயிக்கவும், அதை எங்கு எவ்வாறு ஒருமுனைப்படுத்துவது, எப்படிப் பயன்படுத்துவது என்பதைத் தீர்மானிக்கவும் உங்களுக்கு சக்தி உள்ளது. அவ்வாறு செய்வதன் மூலம், நீங்கள் உங்கள் ஆற்றலை உங்கள் இலக்கு மற்றும் அபிலாஷைகளை நோக்கி திறம்பட செலுத்த முடியும்.



உங்கள் ஆற்றலை கட்டுப்படுத்தும் சக்தி உங்களிடம் உள்ளது என்பதை அங்கீகரிப்பது முக்கியம். நீங்கள் சோர்வாக இருக்கும்போது, ​​உங்கள் மனதை உயர்த்தும் ஒரு விஷயத்தில் உங்கள் கவனத்தைத் திருப்பிவிடலாம். நேர்மறையான நபர்களுடன் நேரத்தைச் செலவிடுவதன் மூலமும், உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் செயல்களில் ஈடுபடுவதன் மூலமும், உற்சாகமூட்டும் செய்திகளால் உங்களைச் சுற்றி வருவதன் மூலமும் உங்கள் ஆற்றலை கையாளலாம். எல்லைகளை நிர்ணயித்தல், எதிர்மறை சூழ்நிலைகள் மற்றும் உறவுகளைத் தவிர்ப்பது, சுய நலனை பயிற்சி செய்தல் போன்ற உங்கள் ஆற்றலைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பது மிக முக்கியம். இந்த பிரபஞ்சம் எதார்த்தமாக உங்களுடன் இணைந்துள்ளது மற்றும் உங்களின் ஓவொரு சிந்தனையை, செயல் மற்றும் ஆற்றலிலும். மற்றும் உங்களுக்கு சாதகமாக இனைந்து, உங்கள் ஆற்றலுடன் எதிரொலிக்கும் அனைத்தையும் உங்களுக்குக் கொண்டுவர உதவுகின்றது.


ஆற்றலின் சக்தியை நம்புவதும் அதன் மீது நம்பிக்கை வைப்பதும் உங்கள் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும். ஆற்றலில் நம்பிக்கை வைப்பதன் மூலம், நீங்கள் பெறுவதற்கான உங்கள் தகுதியை நிர்ணயிக்கின்றீர்கள் மற்றும் மற்றவர்களுக்கு தாராளமாக கொடுக்கும் திறனையும் நீங்கள் நிர்ணயிக்கின்றீர்கள். வாழ்வில் வெளிப்படையாகத் தெரிவதை விட அதிகமாக இருக்கிறது என்பதையும், ஒரு பெரிய சக்தி விளையாடுகிறது என்பதையும் அதனை நம்புவதன் மூலம் உணரத் தொடங்குங்கள். எல்லையற்ற அறிவு, புரிதல் மற்றும் அன்பு கொண்ட பரந்த ஒன்றோடு உங்களை இணைத்துக்கொள்ளுங்கள். ஆற்றலில் நம்பிக்கை வைப்பது உங்கள் நல்வாழ்வில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டுவருகிறது. உங்கள் ஆற்றல் சீரமைக்கப்படுகிறது, அதன்மூலம் உங்கள் செல்கள் புத்துயிர் பெறுகின்றன, மேலும் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படுகிறது.


விரக்தி, குழப்பம் மற்றும் ஏமாற்றம் போன்ற அனைத்து எதிர்மறை உணர்வுகளும் மறைந்து, அமைதி மற்றும் லேசான உணர்வுடன் மாற்றப்படுகின்றன. உங்கள் ஆற்றல் நேர்மறையாகவும், தெளிவாகவும், தூய்மையாகவும், மலை ஓடை போல சீராகவும் பாய்ன்கிறது. நீங்கள் உங்கள் நன்மதிப்பையும், தகுதியையும் தழுவுகின்றீர்கள். மேலும் மகிழ்ச்சி உங்கள் வாழ்க்கையில் ஒரு நிலையான இருப்பாக மாறும். ஞானமும் உள் அமைதியும் உங்கள் இருப்பை வளப்படுத்தும், மேலும் தெளிவு உங்கள் எண்ணங்களில் ஊடுருவும். இது ஆற்றலின் ஆழமான தாக்கம், நீங்கள் அதில் உங்கள் நம்பிக்கையை வைக்கும்போது, ​​எல்லாம் சிரமமின்றி அமையக்கூடும். நீங்கள் பிரபஞ்சத்தை நம்பி, உங்கள் சொந்த திறன்களில் நம்பிக்கை வைக்கும்போது, ​​உங்கள் ஆற்றல் சக்திவாய்ந்ததாகவும் சாந்தமாகவும் மாறும்.


ஞானமும் அமைதியும் உள்ளிருந்து வெளிப்படுகின்றன. உங்கள் எண்ணங்கள் நம்பிக்கைகளாக மாறுகின்றன, உங்கள் கனவுகள் உங்கள் யதார்த்தத்தில் நிறைவேறத் தொடங்குகின்றன. உங்கள் அபிலாஷைகளை நம்பி, அவற்றை நோக்கி உறுதியான நடவடிக்கைகளை நகர்த்துவதன் மூலம், உங்கள் வாழ்வில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை உருவாக்கி, நீங்கள் எதிர்ப்பார்க்கும் அனைத்தையும் சாதிக்கும் திறன் உங்களுக்குள் உருவாகும். உங்கள் மீதும், உங்கள் கனவுகளை நோக்கி உங்களை வழிநடத்த பிரபஞ்சத்தின் வழிகாட்டுதலின் மீதும் நம்பிக்கை வைத்திருங்கள், அதன் மூலம் இந்த உலகில் உங்கள் உண்மையான பணியை நீங்கள் வெளிக்கொணர்வீர்கள்.


கண்களை மூடிக்கொண்டு உங்கள் உள்ளத்துடன் இணையுங்கள். உங்களுக்குள் பாயும் ஆற்றலை உணருங்கள். அன்பு, அமைதி, வலிமை மற்றும் பிரகாசத்தை உணருங்கள். உங்கள் யதார்த்தத்தை உருவாக்கி உங்கள் விருப்பங்களை உணரும் திறன் கொண்ட ஆற்றல் நீங்கள். நீங்கள் திறமையானவர், தகுதியானவர் மற்றும் போற்றப்படுபவர். உங்களையும் பிரபஞ்சத்தையும் நம்புங்கள், உங்கள் வாழ்வில் மந்திரமாக எவ்வாறு வளர்கிறது என்பதைப் பாருங்கள். உங்கள் எண்ணங்களை நம்பிக்கைகளாக மாற்ற, நம்பிக்கை கொள்ளும் செயலை தீவிரமாகப் பயிற்சி செய்வது மிக முக்கியம். உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பிரபஞ்சத்தின் திறனில் நம்பிக்கை வைப்பதன் மூலமும், உங்கள் சாத்தியமான ஆசைகள் மற்றும் கனவுகளை ஒப்புக்கொள்வதன் மூலமும், அன்பு மற்றும் மகிழ்ச்சிக்கான உங்கள் தகுதியைத் தழுவுவதன் மூலமும், நீங்கள் ஆழ்ந்த அமைதியையும் மகிழ்ச்சியையும் வளர்த்துக் கொள்ளலாம்.


நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் கடலில் ஒரு துளி அல்ல. நீங்கள் ஒரு துளியில் உள்ள முழு கடல். உங்கள் அதிர்வுகள் முடிவற்று காலம் முழுவதும் எதிரொலிக்கட்டும், உங்கள் பயணம் முடிவில்லா கண்டுபிடிப்பு, வளர்ச்சி மற்றும் மாற்றத்தின் ஒன்றாக இருக்கட்டும். பிரபஞ்சம் உங்கள் இணக்கமான அதிர்வுகளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறது. உங்கள் கனவான கனவுகளுக்கு அப்பாற்பட்ட ஒரு யதார்த்தத்தை உறுதிப்படுத்த தயாராக உள்ளது. உங்கள் எண்ணங்கள், உணர்ச்சிகள் மற்றும் நம்பிக்கைகளை விரும்பிய அதிர்வுகளுடன் உணர்வுபூர்வமாகத் தேர்ந்தெடுத்து சீரமைப்பதன் மூலம், உங்கள் வாழ்க்கையில் தொடர்புடைய அனுபவங்களை ஈர்க்கவும் வெளிப்படுத்தவும் முடியும்.


நீங்கள் இன்னும் இவ்வரியை படித்துக்கொண்டிருந்தாள், பகிர்தல் மற்றும் கருத்து தெரிவிப்பதன் மூலம் உங்கள் ஆதரவை நான் மிகவும் பாராட்டுகிறேன்! 


இன்னோடி இதனை நீங்கள்  படிக்க என்னை தேர்ந்தெடுத்ததற்கு பிரபஞ்சத்திற்கு நன்றி!.



What mindset shifts and strategies can help to achieve goals and get everything you want out of life? 

 
You are not just a physical being living in a physical world, but you are also made up of energy and exist in a universe where everything vibrates, and you can send and receive energy.

A major hurdle for you is understanding how to thrive as an energetic being in a universe where everything is energy-based. Every word you speak and every action you take, from basic functions like breathing, walking, and eating to intricate emotional and cognitive processes, requires energy.

These thoughts and emotions, characterized by their positive or negative nature, possess inherent energetic vibrations. These vibrations play a crucial role in shaping your experiences and influencing the world around you. Achieving mastery over your vibrations enables you to unlock a realm of boundless potential. It is vital to acknowledge yourself as an energy transmitter, continually sending signals to the universe that convey information about yourself. These signals possess the capacity to attract or repel other energetic entities, events, and experiences. Should your energetic self emanate anger and frustration, your physical reality will reflect this accordingly.

It is only natural to gravitate toward elements that resonate with your emotional state and personal identity. When you exude an aura of prosperity and abundance, your life will inevitably mirror this energy by attracting increased wealth and abundance into your physical reality. Conversely, if you radiate negative or discordant energy, you will likely repel experiences that do not align with your state of being. Upon recognizing that your vibrational self attracts similar energies, it becomes clear that if you desire a different experience in your life, you must modify the signals you are emitting. In other words, if you wish to attract alternative circumstances or outcomes, you must adjust your thoughts, emotions, and overall energy to align with your desired experience. By consciously altering the signals you transmit, you can create a shift in the patterns and experiences that enter your life.

You possess an immense capacity for influence, surpassing your imagination. By mastering the techniques of transmitting vibrational frequencies aligned with your desired life, you can fundamentally change your worldly experiences and synchronize with your ideal existence. Your thoughts are not merely random cognitive processes. They carry vibrational energy and signatures. Each thought you generate triggers a specific vibrational frequency in your brain's neurons, creating a potent force that aligns with and attracts corresponding experiences. In essence, the vibrational energy emitted by your thoughts acts as a magnet, drawing and manifesting the essence of your focus. By understanding these principles, you can consciously direct your thoughts towards desired outcomes.

Leveraging the power of your thoughts to shape your reality, it is essential to recognize that your thoughts are the fundamental building blocks of your reality. There is a saying: watch your thoughts, as they evolve into words; watch your words, as they translate into actions; watch your actions, as they develop into habits; watch your habits, as they shape your character; and watch your character, as it determines your destiny. Your thoughts are the seeds that ultimately manifest your future.

It is crucial to be aware of how you allocate your energy, as it follows your attention. Ultimately, the decision of where to direct your energy rests with you. You possess the autonomy to choose, and even the act of making a decision necessitates energy. Albert Einstein once stated that everything is energy. Indeed, even reading this post necessitates energy. The energy we concentrate on ultimately shapes our reality. You have the capacity to guide and manage this energy, determining where to focus it and how to utilize it. By doing so, you can effectively channel your energy towards your objectives and aspirations.

It is vital to recognize that you have the power to manage your energy. When you are feeling down, you can redirect your focus to something that lifts your spirits. You can also shape your energy by spending time with positive people, engaging in activities that bring you joy, and surrounding yourself with uplifting messages. Taking steps to preserve your energy is also essential, including setting boundaries, avoiding negative situations and relationships, and practicing self-care. The universe aligns in your favour, bringing you everything that resonates with your energy.

Having faith in the power of energy can bring about remarkable transformations in one's life. By trusting in energy, individuals recognize their own deservingness to receive and their capacity to generously give to others. Start perceiving that there is more to life than what is apparent, and that a greater force is at play. Become connected to something vast, something that possesses boundless knowledge, understanding, and love. Trusting in energy brings about remarkable changes in one's well-being. One's energy aligns, cells rejuvenate, and overall health improves.

Despair, confusion, and disappointment give way to an intensified sense of serenity and lightness. Your energy is revitalized, becoming clear, pure, and flowing effortlessly, much like a mountain stream. By acknowledging your worthiness and deservingness, joy becomes a persistent presence in your life. Wisdom and inner peace augment your being, while clarity pervades your thoughts. This is the profound impact of energy, and when you trust in it, all aspects of your life fall into place. When you trust in the universe and have faith in your abilities, your energy becomes both powerful and serene.

Wisdom and peace emerge from within. Your thoughts transform into convictions, and your dreams begin to manifest in your reality. By believing in your aspirations and taking purposeful steps towards them, you possess the capacity to effect meaningful transformations in your life and achieve all that you desire. Have faith in yourself and the universe's guidance to lead you towards your purpose, and you will discover your true mission in this world.

Close your eyes and connect with your inner self. feeling the energy coursing through you. feel the love, the peace, strength and the brightness. you are energy with the ability to create your reality and realize your aspirations. You are capable, worthy and adored. Believe in yourself and the universe, and watch the magic develop in your life. To transform your thoughts into beliefs, it is crucial to actively practice the act of believing. By placing faith in the universe's ability to provide for your needs, acknowledging your potential desires and dreams, and embracing your deservingness of love and happiness, you can cultivate deep peace and joy. 

Remember, you are not a drop in the ocean. You are the entire ocean in a drop. Let your vibrations echo throughout eternity, and may your journey be one of endless discovery, growth and transformation. The universe eagerly awaits your harmonious vibrations, ready to concrete a reality beyond your wildest dreams. By Consciously choosing and aligning your thoughts, emotions, and beliefs with the desired vibrations, you can attract and manifest corresponding experiences in to your life. 



If you're still active here, I'm grateful to the universe has brought us to this shared moment.

I would highly appreciate your continued support through sharing and commenting, as it would be deeply valued by me.




No comments:

Post a Comment

Drop Your Comment Here